Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகை சுற்றும் டெல்டா + கொரோனா வைரஸ்... இரையாகிய 80 நாடுகள்!

Advertiesment
உலகை சுற்றும் டெல்டா + கொரோனா வைரஸ்... இரையாகிய 80 நாடுகள்!
, புதன், 23 ஜூன் 2021 (08:24 IST)
டெல்டாவில் இருந்து உருமாறிய டெல்டா+ கொரோனா வைரஸ் உலகளவில் 9 நாடுகளுக்கு பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா + வகை வைரஸாக உருமாறியுள்ளது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் அதிகமாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் டெல்டா+ கொரோனா வகை வைரஸ், இந்தியாவில் 22 பேருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது. 
 
மேலும் இவ்வகை கொரோனா வைரஸ், உலகளவில் இங்கிலாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், சுவிட்ஸலார்ந்து, ஜப்பான், போலாந்து, நேபாளம், சீனா, ரஷ்யா ஆகிய 9 நாடுகளுக்கு பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா, தற்போது 80 நாடுகளில் பரவுவதாகவும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் பேக்கெட்??