Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தட்டு தடுமாறி சரிவை சந்திக்கும் கொரோனா... 2 மாதங்களில் முதல் முறை!

தட்டு தடுமாறி சரிவை சந்திக்கும் கொரோனா... 2 மாதங்களில் முதல் முறை!
, திங்கள், 7 ஜூன் 2021 (11:51 IST)
இந்தியாவில் கடந்த 2 மாதத்தில் முதன் முறையாக ஒரு லட்சத்தை ஒட்டிய தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2 மாதத்தில் முதன் முறையாக ஒரு லட்சத்தை ஒட்டிய தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 25 வது நாளாக இன்று தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

+2 மதிப்பெண்கள் எந்த முறையில் வழங்கப்படும்!? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!