Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்கும் இறந்த துறவி..... இரண்டு மாதம் கழித்தும் எப்படி?

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (17:58 IST)
தாய்லாந்தில் இறந்த மதகுரு ஒருவரின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரின் உடல் அழுகாத நிலையில் மேலும், சிரித்துக்கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 92. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாங்காங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
 
தற்போது அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு  ஆடைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது. 
 
ஆனால், இதில் என்ன ஆச்சரியமெனில் இறந்தபின்னரும் சிரித்தபடியே இவர் இருந்துள்ளார். மேலும் அவரது உடல் அழுகாத நிலையில் இருந்ததுள்ளது. இதனால் இந்த மதகுரு குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments