Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவில் பாறைகளை எடுத்து வந்த சீனா! – 45 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (08:30 IST)
நிலவில் பாறைகள், மணல்களை சேகரிக்க சென்ற சீன விண்கலம் வெற்றிகரமாக மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது.

நிலவில் இருந்து பாறைகள், கற்களை சேகரித்து வந்து ஆய்வு செய்யும் திட்டத்தில் சீனா இறங்கியுள்ளது. இதற்காக கடந்த மாதம் 24ம் தேதி “சேஞ்ச்5” என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

கடந்த 1ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சேஞ்ச் 5 அங்கிருந்து கற்கள் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு 3ம் தேதி புறப்பட்டது. அங்கிருந்து பயணித்து சீனாவின் மங்கோலியா பகுதியில் நேற்று வெற்றிகரமாக தரையிரங்கியுள்ளது. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இந்த மாதிரிகளை சேகரித்த முயற்சி பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னமே நிலவில் மாதிரிகளை சேகரித்துள்ள நிலையில் 45 ஆண்டுகள் கழித்து நிலவில் மாதிரிகள் சேகரித்த மூன்றாவது நாடாக சீனா பட்டியலில் இணைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments