1) இந்த ஆண்டில் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். இதில், டிரம்பும் குடியசுக் கட்சி சார்பிலும், ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர். ஜோ பிமொத்தமுள்ள 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் 290 வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜோ பிடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகி உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வயதுள்ள அதிபர் ஜோ பிடன் தான். அவர் அடுத்த வருடம் (2021)ஜனபரி 20ஆம் தேதி பதபியேற்கும்போது, அவரது வயது 78 ஆக இருக்கும் என தெரிகிறது.
2) கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதன் வீரியம் குறைந்து, இறப்பு விகிதமும் பாதிப்புகளும் குறைந்தாலும் இன்னமும் தொற்றுவிட்டபாடில்லை. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 7,35,73,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,37,805 பேர் மொத்தம் இறந்துள்ளனர். 41.7 மில்லியன் மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
3) கடந்த 1960 ஆம் ஆண்டு பியூனஸ் ஏரிஸ் நகரில் பிறந்தவர் மாரடோனா. இவர் அர்ஜெண்டினா தேசிய கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்டு, 1986 ஆம் ஆண்டு உலகப்கோப்பையை இவரது தலைமையில் வென்றார். இவரைக் கால்பந்துவிளையாட்டின் கடவுள் என்று அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாரடோனா,கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தனது 60 வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
4) இந்திய சினிமாவில் தன் தன்னிகரற்றக் குரலால் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த பாட்டுக்குயில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார்.
5) மத்திய பாஜக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடந்து 20 நாட்களுக்கும் மேலான போராட்டி வருகின்றனர். மத்திய அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இச்சட்டம் குறித்து சில தளர்வுகள் வரலாம் என தெரிகிறது. உலகில் மிகப்பெரிய போராட்டம் என வரலாறு பதிவு செய்துள்ளது.
6) பாலிவுட் சினிமாவில் இளம் நடிகரும் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவருமான சுஷாந்த் சிங். கடந்த ஜூன் 24 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில் தற்போது இவரது காதலி உள்ளிட்ட பாலிவுட் நடிகர் நடிகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்திவருவது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7) இந்தியாவில் வங்காளக் கடலோரத்தில் உருவான உம்பன் புயல் மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதம்விளைவித்தது. கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிவர் புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் சேதம் விளைவித்தது.
8) இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான தனது அரசியல் வருகை குறித்து எதுவும் தகவல் தெரிவிக்காமல் இருந்த ரஜினி, அடுத்த வருடம் ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிக்கவுள்ளாதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
9) அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியப் படைகள் ஒருவருக்கொருவர் பீரங்கி மற்றும் கடும் ராக்கெட்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் பொதுமக்கள் பலர் பலியாகினர். இதுகுறித்து உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
10) கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, குவைத் மன்னர் அமீர் ஷேக் அஹ்மத் தனது 91 வது வயதில் காலமானார். உலகில் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமை அவருக்குண்டு. இவரது ஆட்ச்யில்தான் குவைத் உலகில் பொருளாதார ரீதியில் சக்திமிக்க நாடாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
சினோஜ்