Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: வௌவால், பூனைகளை சாப்பிட தடை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பூனை போன்ற உயிரினங்களை சாப்பிட சீன அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் சீனா முழுவதும் வௌவால், பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆடு, மாடு, வாத்து, கோழி, மீன் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் புதிய வைரஸ் உருவாகாமலும் தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments