Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானை வட்டமிட்ட 71 சீன விமானங்கள்! பதிலடிக்கு தயாராகிறதா தைவான்?

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (14:15 IST)
தைவான் – அமெரிக்க உறவு குறித்து அதிருப்தியில் உள்ள சீனா போர் ஒத்திகை செய்வதாக தைவான் எல்லையில் விமானங்களை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா அருகே உள்ள தைவான் தாங்கள் தனிநாடு என கூறிவரும் நிலையில், சீனா அதை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தைவானை தனி நாடாக அங்கீகரித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் தைவான் பயணங்கள் சீனாவை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அரசியல் தலைவர் தைவான் சென்று வரும் நிலையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளது சீனா. கடந்த இரண்டு நாட்களாக சீனா போர் ஒத்திகை செய்து வரும் நிலையில் சீனாவின் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் பல ஒத்திகை என்ற பெயரில் தைவான் எல்லைக்குள் நுழைந்து செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தைவான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தைவான் எங்கள் தாய் வீடு. எங்கள் தாய்நாட்டை பாதுகாக்க முழு மனதுடன் போராடி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments