Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவில் டிக்டாக் செயலிக்கு தடை

ஆஸ்திரேலியாவில் டிக்டாக் செயலிக்கு தடை
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:46 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, கனடா, பெல்ஜியம், ரஷியா, ஜப்பான்  உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே சீனாவின் டிக்டாக் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது' என்று  அந்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகம் முக்கியஉத்தரவிட்டது

ரஷியா நாட்டிலும், டிக்டாக், ஸ்னாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்கள் பயங்கரவாத ஆப்களாக பரிந்துரைக்கப்பட்டு, அவை தடை செய்யப்பட்டன.

இதேபோல், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக  பிரான்ஸ் நாட்டிலும்  'டிக் டாக்' செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆஸ்திரெலியாவில் பிரதமர் ஆண்டனி அல்பனாஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில்,   பிரதமர் ’ அல்பனாஸ் ‘’டிக்டாக் செயலியால் ஏற்படும் சாதக், பாதகங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, டிக்டாக் செயலியைப் பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக’’ தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’நாட்டின் பாதுகாப்பு கருதி, உளவுத்துறை அறிவுறுத்தலின்படி, டிக்டாக் செயலி தடைவிதிக்கப்படுவதாக’’ தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்வு: இம்மாதம் முதல் அமல்