Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேற வழி இல்ல... நடுவானில் சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவர்!

Advertiesment
வேற வழி இல்ல... நடுவானில் சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவர்!
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (17:40 IST)
விமான பயணத்தின் போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற சீன மருத்துவர் ஒருவர்  சிறுநீரை வாயால் உறிஞ்சிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து நியூயார்க்கிற்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் முதிய பயணி ஒருவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 
 
சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க விமானத்தில் இருந்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் முடிவு செய்தனர். விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினர். 
 
சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் துவங்கினார் அந்த டாக்டர். 
 
கிட்டத்தட்ட 37 நிமிடங்களுக்கு சுமார் 800 மில்லி சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றி முதியவரின் உரிரை காப்பாற்றிய அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் இறப்பு: அதிர்ச்சி தகவல்!