அமெரிக்காவில் ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அப்லேண்ட் நகரின் கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 11 மணி அளவில் கிளம்பிய Cirrus SR22 என்ற விமானம், மவுண்டெயின் அவன்யூவில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.
வீட்டின் மீது விழுந்ததில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இச்சம்பவத்தை குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த தந்தை, மற்றும் மகன் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். ஆனால் விமானி உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதனை அப்லேண்ட் போலீஸ் அதிகாரி மார்செலோ ப்ளாங்கோ உறுதி செய்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜெரால்ட் என்ற நபர், “விமானம் மிகவும் தாழ்வாக பறந்து வந்துகொண்டிருந்தது, பின்பு யூடர்ன் எடுக்கும்போது, வீட்டின் மீது மோதி கீழே விழுந்து தீப்பிடித்தது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.