பசில் ராஜபக்ச எம்பி பதவியை ராஜினாமா செய்கிறாரா? இலங்கையில் பரபரப்பு
இலங்கையின் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது அடுத்து பொதுமக்களிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர் ராஜினாமா செய்தார்
இந்த நிலையில் இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த செய்திகள் இலங்கை ஊடகத்தில் வெளிவருவதே அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.