Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் குடியேற தப்பி ஓடிய அஷ்ரப் கனி திட்டம்?

அமெரிக்காவில் குடியேற தப்பி ஓடிய அஷ்ரப் கனி திட்டம்?
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் தகவல். 

 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் தலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் தன்னுடன் கோடிக்கணக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. 
 
ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கானி, கஜகஸ்தான் என்ற நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
 
இதற்கிடையில் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன. இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாடும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில் அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு தரலைனா உன் மனைவி வீடியோவை…! – கணவரை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்!