ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு ஆப்கனில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் தூதரகம் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.