கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு துறைக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் 2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் பெற்று கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதமே அமைதிக்கான நோபல் பரிசு ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலைஇயில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அவர் இந்த பரிசினை பெற்று கொண்டார். இந்த விழாவில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும், பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது.
நோபல் பரிசை பெற்றாவுடன் பீட்ரைஸ் ஃபிஹ்ன் அவர்கள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகட்டும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகட்டும் இந்த உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களான இவர்களிடம் உள்ளது. இப்படி ஒரு அதிகாரம் யாரிடமும் இருக்க கூடாது என்று கூறினார்