‘ஆர்.கே. நகர்’ படத்துக்காக அமெரிக்க மாடல் அழகியுடன் ஆட்டம் போட இருக்கிறார் வைபவ்.
 
									
										
								
																	
	வெங்கட்பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஆர்.கே. நகர்’. இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க, சனா அல்தாஃப் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி இசையமைக்கிறார்.
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	சரவண ராஜன் ஏற்கெனவே இயக்கிய ‘வடகறி’ படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு ஜெய்யுடன் சன்னி லியோனை ஆடவைத்தார். தற்போது இந்தப் படத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் இந்த குத்துப்பாடலைப் படமாக்க உள்ளனர். வைபவுடன் சேர்ந்து அமெரிக்க மாடல் அழகி ஒருவர் ஆட ஒருக்கிறாராம். இந்த மாதம் 30ஆம் தேதி முதல் தாய்லாந்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.