Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 ஆண்டுகளாக தவறான வார்த்தையைப் பயன்படுத்தி ஞானஸ்தானம் செய்த பாதிரியார்… செல்லாது என அறிவிப்பு!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:36 IST)
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 26 ஆண்டுகளாக தவறாக ஞானஸ்தானம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதத்தில் அனைவரும் சர்ச் பாதிரியார் மூலமாக ஞானஸ்தானம் பெற வேண்டும் என்பது விதி. இதற்கான விதிமுறைகளை வாட்டிகன் தேவாலயம் வகுத்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணாத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞானத்தந்தையாக இருக்கும் ஆண்ட்ரெஸ் அராக்னோ என்பவர் தவறான வார்த்தையின் மூலமாக ஆயிரக் கணக்கானவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாட்டிகன் தேவாலயத்தின் அறிவுறுத்தல் படி ’நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன்( I baptize you)’ என சொல்ல வேண்டும். ஆனால் பாதர் அராக்னோ ’நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் (We baptize you)’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி 1994- 2021 வரை ஆயிரக்கணக்கானோருக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளார். இது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அவரால் ஞானஸ்தானம் வழங்கப்பட்டது எதுவும் செல்லாது என்றும் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் திரும்பப் பெறவேண்டும் என கூறப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments