Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரேசிலில் விமான விபத்து..! விமானி உள்பட 7 பேர் பலி.!

air crashed

Senthil Velan

, திங்கள், 29 ஜனவரி 2024 (15:12 IST)
பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 7 பேர் பலியானார்கள்.
 
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானத்தில் விமானி உள்பட 7  பேர் பயணித்தனர். பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம்  பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

 
இதுவரை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு