Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

81 - வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் .. ஏன் தெரியுமா ?

81 - வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் .. ஏன் தெரியுமா ?
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:14 IST)
உக்ரைன் நாட்டில் கட்டாயமாக ராணுவச் சேர்க்கை அமலில் உள்ளது. அதனல் நாட்டில் உள்ள ஆண்கள் இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர வேண்டுமென சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
அதில், இளைஞர்கள் மாற்றுத் திறனாளி பெண்ணை மணம் செய்திருந்தால் அவர்கள் ராணுவத்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ராணுவத்தில் சேராமல் இருக்கவே, 24 வயதான அலெக்சாண்டர் கெண்ட்சாட்டிக் என்ற இளைஞர், உறவுமுறை கொண்ட 81 வயது மூதாட்டியான, இல்லாரியோனோவ்னாவைத் திருமணா செய்து கொண்டார்.
 
இதில், ஆச்சர்யம் அளிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கலியாணம் முடிந்த பின்னர், அலெக்சாண்டர் ஒருமுறை கூட மூதாட்டியின் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
 
ஆனால், ராணுவத்தில் சேருவதைத் தடுக்கவே அலெக்சாண்டர் இந்த மாதிரி மூதாட்டியை கலியாணம் செய்ததாகவும் கூறிவருகின்றனர்.
 
தற்போது, இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதி தாமதமாக கிடைத்துள்ளது: ஜெயகோபால் கைது குறித்து கமல்ஹாசன்