Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைனில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Advertiesment
ஆன்லைனில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
, செவ்வாய், 24 ஜூலை 2018 (15:41 IST)
சீனாவில் ஒயின் தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாம்பு வாங்கிய  பெண் ஒருவர் அந்த பாம்பினாலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஸியோபேங் என்ற பெண் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றான பாம்பு ஒயினை தயாரிக்க திட்டமிட்டார். பாம்பு ஒயினை தயாரிக்க பாம்புகளை ஆல்கஹாலில் மூழ்க வைக்க வேண்டும்.
 
ஆகவே பாம்பு ஒயினை தயாரிப்பதற்காக அந்த பெண், ஆன்லைனில் பாம்பை ஆர்டர் செய்து வரவழைத்தார். பின் அந்த பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்தார். சமீபத்தில் பெண்ணின் விரலை அந்த பாம்பு கடித்துள்ளது. உடனடியாக ஸியோபேங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருந்தபோதிலும் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
webdunia
இந்நிலையில் அந்த பாம்பின் விஷக்கடிக்கான சரியான மருந்து கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி ஸியோபேங் பரிதாபமாக உயிரிழந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடை நீக்கப்படுமா? ஏவுகணை சோதனை மையத்தை அழித்த வடகொரியா!