Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிய எடப்பாடியார்

Advertiesment
பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிய எடப்பாடியார்
, செவ்வாய், 24 ஜூலை 2018 (11:58 IST)
வண்டலூர் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என பெயர் சூட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமான சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
 
நிலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும்  6 மாத பெண் சிங்கக் குட்டி உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர பக்தரான எடப்பாடி பழனிசாமி, பெயர் சூட்டும் விழாவில், அந்த பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷிகெல்லா வைரசால் 2 வயது குழந்தை பலி - கேரளாவில் அதிர்ச்சி