அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மீதான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் மீது தொடர்ந்து எழுந்த புகார்களை தொடர்ந்து அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் மீதான விசாரணையை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து செனட் சபையில் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. செனட் சபையில் ட்ரம்ப் பதவி வகிக்கும் ரிபப்ளிகன் கட்சியின் உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால் செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனால் பொனால்டு ட்ரம்ப் அதிபராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.