Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூயார்க் சிட்டியில் திடீர் நிலநடுக்கம்.. விண்ணை முட்டும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 6 ஏப்ரல் 2024 (08:08 IST)
நியூயார்க் நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக உலகின் சில பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு திடீரென ரிக்டர் அளவில் 4.8 என நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்கில் ஏற்கனவே விண்ணை முட்டும் கட்டிடங்கள் பல இருக்கும் நிலையில் அந்த நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நேரப்படி இரவு 7:35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பூமிக்கு அடியில் 116.5 மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்போ, உயிர் சேதமோ இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் நியூயார்க்கில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments