வெள்ளத்தில் உலா வரும் 70 பயங்கர முதலைகள்; யாரும் வெளியே வராதீங்க! – ஹாங்காங்கில் பரபரப்பு!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:53 IST)
சீனாவில் கனமழை, வெள்ளம் வாட்டி வரும் நிலையில் வெள்ளத்தில் 70க்கும் மேற்பட்ட முதலைகள் சுற்றி திரிவதால் பரபரப்பு எழுந்துள்ளது.



சீனாவில் கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. சீனாவின் ஹாங்காங் பகுதியில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் மக்கள் முழங்காலுக்கு மேல் நிரம்பியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹாங்காங்கில் உள்ள முதலை வளர்ப்பு பண்ணைகளில் வளர்க்கபட்டு வந்த 70க்கும் மேற்பட்ட முதலைகள் மாயமாகியுள்ளன. ஊர் முழுவதும் வெள்ளமாக இருப்பதால் அவை வெள்ளநீருடன் வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. தப்பிய முதலைகளை பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

70க்கும் மேற்பட்ட அபாயகரமான முதலைகள் வெள்ளத்தில் சுற்றி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments