Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 662 பேர் பலி: இத்தாலியில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:32 IST)
இத்தாலியில் கோரத்தாண்டவமாடும் கொரோனா
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவைவிட அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தான் மிக மோசமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை பிடித்துவிட்ட நிலையில் இத்தாலியிலும் இந்த வைரசால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 662 பேர் கொரோனாவைரசால் பலியாகி உள்ளதாகவும், கொரோனாவால் இறந்தவர்களை தனித்தனியாக புதைக்க இடமில்லாமல் கொத்துக்கொத்தாக பிணங்களை பெரிய குழிகளில் போட்டு மொத்தமாக புதைத்து வருவதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன
 
இத்தாலியில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 8000 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், கோரத்தாண்டவமாடும் கொரோனா வைரசால் இத்தாலி நாடே சுடுகாடாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்றால் பொதுமக்களும் அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments