கொரோனா பாதிப்பால் வாசனை , சுவை திறனை இழந்த பிரபல நடிகர் !

வியாழன், 26 மார்ச் 2020 (22:31 IST)
கொரோனா பாதிப்பால்,வாசனை மற்றும் சுவை, திறனை இழந்த பிரபல நடிகர் !

கொரோனாவுக்கு உலகமே அஞ்சி வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் ,விளையாட்டு நட்சத்திரக்கள் எஃப்,எம் மற்றும் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால் இதே கொரோனாவுக்கு பிரபல நடிகர்கள் , இங்கிலாந்து இளவரசர், விளையாட்டு வீரர்கள் பாடகிகள் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில்,  பிரபல பாப் பாடகரும் நடிகருமான ஆரோன, தனாக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுவை மற்றும்  வாசனை திறனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் மற்றும் பாடகருமான ஆரோன் தனது இன்ஸ்டாம் கிராம் பதிவில் கூறியுள்ளதாவது :

எனக்கு ’’ கோவிட் 19’’ என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததால் மருத்துவமனையில் உடனடியாக சோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு பாசிட்டிவாக வந்தது.

எனவே நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது.அதனால் எனது வாசனை அறியும் திறனை இழந்துவிட்டேன்., சுவை அறியும் திறனையும் இழந்துள்ளதாக சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அசால்டா இருக்காதீங்க…துக்கத்துடன் சொல்லுறேன்,கை கூப்பி வேண்டிக் கொண்ட வடிவேலு!!