Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனாவை ஒழிக்க களமிறங்கிய தல அஜித்தின் டீம்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:23 IST)
சென்னையில் கொரோனாவை ஒழிக்க களமிறங்கிய தல அஜித்தின் டீம்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதார தூய்மை பணியாளர்கள் தமிழகமெங்கும் கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினியை தெளிக்கும் அளவிற்கு ஊழியர்கள் இல்லை
 
இந்த நிலையில் தல அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா டீம், ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ட்ரோன் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யலாம் என நிரூபித்த இந்த டீம், தற்போது சென்னையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினியை தெளிக்க திட்டமிட்டுள்ளனர்.
 
இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தக்‌ஷா குழுவினர் நேற்று ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் சென்னை நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில மணி நேரத்தில் கிருமி நாசினியை தெளித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே அஜித்தின் தக்‌ஷா குழுவினர் ட்ரோனை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனாவை ஒழிக்கும் பணிக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். தல அஜித் ஆலோசகராக இருக்கும் இந்த தக்‌ஷா டீம், இந்த விஷயத்தில் வெற்றி பெற்றால் அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments