Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 602 பேர் பலி: கொரோனாவால் காலியாகும் இத்தாலி?

ஒரே நாளில் 602 பேர் பலி: கொரோனாவால் காலியாகும் இத்தாலி?
, செவ்வாய், 24 மார்ச் 2020 (08:11 IST)
ஒரே நாளில் 602 பேர் பலி:
கொரோனா வைரஸ் ஆரம்பித்த சீனா கூட தற்போது மீண்டு வரும் நிலையில் இத்தாலி கொரோனா வைரஸால் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது
 
இத்தாலியில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பலியாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 602 பேர் இத்தாலியில் மட்டும் கொரோனா பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இத்தாலியில் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சீனாவை அடுத்து இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் பலியாகி வருவது மனித இனத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 602 பேர் பலியாகியுள்ளதாகவும் இதுவரை அந்நாட்டில் மட்டும் 6,077 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்பதால் இத்தாலியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும், உயிரிழப்பை அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் இத்தாலியே இன்னும் ஒரு சில நாட்களில் காலியாகி விடுமோ என்று அஞ்சப்படுகிறது 
 
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 186 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 860 என்றும் செய்திகள் வெளியானது. அதேபோல் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 100பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையைக் கிளப்பிய மு க ஸ்டாலினின் தவறான பதிவு – டிவிட்டரில் இருந்து நீக்கம் !