Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தானில் 2 வது வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் 2 வது வெடிகுண்டு  தாக்குதல்
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (21:47 IST)
ஆப்கானிஸ்தானில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரத்திற்குள் 2 வதாக வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாட்டு மக்கள் தங்களின் நாடுகளுப்போக நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது காபூலில் 2 வது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. முதல் தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகும் நிலையில், 2வது தாக்குதல் விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசிக்கான தவணைக்காலம் குறைகிறது