Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத போதகரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 1 லட்சம் பேர் !

Advertiesment
1 lakh people attending
, திங்கள், 20 ஏப்ரல் 2020 (19:25 IST)
வங்கதேசத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே,  இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேச நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் மக்கள்  மசூதி மற்றும் தொழுகை நடத்தும் இடங்களில் 5க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி, பிரம்மன் பரியா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரி காலமானார்.

இதையடுத்து, அவரது இறுதிச் சடங்கில் 1 லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டர். மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறுனர். இந்நிலையில், சமூக விலகலைக் கடைபிடிக்காத மக்களுக்கு அதிகளவில் கொரொனா தொற்று ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த பிறகு ரூ.1 கோடி கொடுப்பது முக்கியமா? முக ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் கேள்வி