Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி...?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:11 IST)
தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 4 கப்
அரிசி நொய் - 2 கப்
தயிர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். மறுநாள் மாலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும்.

பின்னர் நொய் வெந்ததும், கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும். மறுநாள் காலை காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், சுவை அலாதியான கேழ்வரகு கூழ் தயார். விருப்பப்பட்டால் இதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். கூழுடன் வறுத்த மோர் மிளகாய், துவையல் வகைகள், மாங்காய் காரம், ஊறுகாய் போன்றவை சாப்பிட சிறந்ததாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

அடுத்த கட்டுரையில்
Show comments