Publish Date: Fri, 01 Apr 2022 (11:11 IST)
Updated Date: Fri, 01 Apr 2022 (11:13 IST)
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
நேற்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, தொண்டி மற்றும் வேலூரில் 100 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக கரூரில் 104.9 டிகிரி வெயில் வாட்டியது. இன்றும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் தாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.