Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள்...?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:02 IST)
ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடலில் இருக்கும் செல்களால் ஏற்படும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவது குறைவு.


தினமும் ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 6 சதவிகித தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து வெளியேறுகிறது.

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, அதில் பல நார்ச்சத்து நீரில் கரையகூடிய தன்மை கொண்டது. இந்த நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.

ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதயத்தில் ரத்த குழாய்கள் அடைக்காமல் பாதுகாக்கிறது.

ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது,மேலும் கண் மங்குதல், கண் புரை போன்றவற்றை நீக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments