Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ருசியான சைவ மீன் குழம்பு எப்படி செய்வது...?

Advertiesment
Saiva Fish Kuzhambu
, சனி, 2 ஜூலை 2022 (15:27 IST)
தேவையான பொருட்கள்:

தட்டபயறு - 1 கப்
பூண்டு - 2 பற்கள்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம்  - 1/4 டீஸ்பூன்
சோம்பு  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2-3 கப்
உப்பு - சுவைக்கேற்ப



செய்முறை:

முதலில் தட்டபயறை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, நன்கு கழுவி விட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ‘சைவ மீன் செய்வதற்கு’ கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாழை இலையில் அரைத்த விழுதை தட்டையாக பரப்பி மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் வேகவைத்ததை மீன் போன்று ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேகவைத்து வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் (தனியா) மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும். இறுதியில் பொரித்து வைத்துள்ளதைப் போட்டு, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், ருசியான சைவ மீன் குழம்பு தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !!