தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான மக்ரோனி தயார்.
குறிப்பு: 1 டம்ளர் மக்ரோனிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் விடவேண்டும். அதேப் போல் குக்கரை மூடும் முன், மக்ரோனிக்கு மேல் தண்ணீர் உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், சிறிது தண்ணீர் சேர்க்கவும்.