Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் ஜெயராமன் சட்டப்படிப்பில் முறைகேடு - துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (17:54 IST)
சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் அம்பேத்கார் பல்கலைக்கழக்த்தில் சட்டப்படிப்பு பட்டம் பெற்றதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 
அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி ஹானர்ஸ் பட்டப்படிப்புக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின்(என்.ஆர்.ஐ) கீழ் முறைகேடாக ஆவணங்கள் இன்றி ஜெயா டிவியின் சிஇஓ, ஜாஸ் சினிமாஸின் சிஇஒ விவேக் ஜெயராமன் சீட் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
2015ம் ஆண்டு மூன்றாண்டு எல்.எல்பி ஹானர்ஸ் படிப்பில் வெளி நாட்டு இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்திய தூதரகத்தின் சான்றிதழ், வங்கி கணக்கு, உறுதி சான்றிதழ், தகுதி சான்றிதழ் என அதற்கான ஆதாரங்கள் எதுவுமே அவரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
அதோடு, விவேக் ஜெயராமன் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, துணைவேந்தர் வணங்காமுடியின் அறையில்தான் அமர்ந்து தேர்வே எழுதுவார். சக மாணவர்களோடு அல்ல எனவும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments