Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவா? சபரிமலையில் பரபரப்பு

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவா? சபரிமலையில் பரபரப்பு
, திங்கள், 22 அக்டோபர் 2018 (08:20 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையில் பெண்கள் ஒருசிலர் கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை வியாபாரமாக்க வழக்கம்போல் ஊடகங்கள் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சபரிமலையிலேயே கேமிராவுடன் தங்கியுள்ளனர். ஒரு உணர்ச்சிமயமான மதரீதியிலாக விஷயத்தை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஊடகங்கள் தரும் செய்தியால் பரபரப்பும் பதட்டமும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில்  சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையிலிருக்கும் செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கேரள போலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மதிக்காத செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்தகவலும் வெளிவந்துள்ளதால் செய்தியாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவா? சபரிமலையில் பரபரப்பு