Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐதீகம் வேறு, அடக்கு முறை வேறு: திருமாவளவனுக்கு தமிழிசை பதிலடி

ஐதீகம் வேறு, அடக்கு முறை வேறு: திருமாவளவனுக்கு தமிழிசை பதிலடி
, திங்கள், 22 அக்டோபர் 2018 (07:49 IST)
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் கடந்த சில நாட்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பக்தியுடன் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீம்புக்காக இஸ்லாமிய, கிறிஸ்துவ பெண்களும் கோவிலுக்குள் செல்ல முயற்சிப்பதால் சட்ட ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், '100 வருடங்களுக்கு முன்பு பெண்கள் மார்பக சீலை அணியக்கூடாது என்ற ஐதீகம் இருந்தது. ஐதீகம் என்ற வார்த்தையை சொல்லி மட்டுமே இன்றும் பெண்களை சபரிமலைக்குள் செல்லக்கூடாது என சொல்பவர்கள்,  இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்த ஐதீகத்தை தற்போது பின்பற்ற முடியுமோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia
திருமாவளவனின் இந்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஐதீகம் என்பது வேறு அடக்குமுறை என்பது வேறு. அன்றிருந்தது அடக்குமுறை. ஐதீகம் அல்ல...நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? முத்தலாக்? மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை? பற்றி ஏன் பேச மறுப்பு ஏன்? கன்னியாஸ்திரிகள் மானபங்கப்பட்டதை கண்டிக்க மனம் இல்லை ஏன்? அதெல்லாம் பெண்ணுரிமை இல்லையா? என்று கூறியுள்ளார்.,

ஐதீகத்திற்கும் அடக்குமுறைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு தலைவர் பொறுப்பின்றி பேசுவதாக டுவிட்டர் பயனாளிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உ.பி யில் பயங்கரம்: மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்