Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

Advertiesment
Annamalai

Prasanth Karthick

, வியாழன், 13 மார்ச் 2025 (11:28 IST)

தனது மகன்கள் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தனர் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். 

 

தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். 

 

அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,

 

முதல் மொழி: ஆங்கிலம்

இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்

 

இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? 

 

வெளங்கிடும் 

 

தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? 

 

அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்ப தும்முனாதான் கரெக்டா இருக்கும்! மொழி பிரச்சினையை வைத்து விளம்பரம் செய்த டைரி மில்க்!