டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மதுபான ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் மது கொள்முதல் மற்றும் விற்பனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது என்பதும் குறிப்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் சொந்தமான மதுபான நிறுவனம் உள்பட ஏழு இடங்களில் தமிழக முழுவதும் சோதனை நடைபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறையீடு, சத்தீஸ்கர் மதுபான ஊழல் போன்று தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லியில் மதுபான ஊழல் கொள்கையில் முறைகேடு செய்ததாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்திலும் மதுபான ஊழல் நடந்து உள்ளது என்று அண்ணாமலை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.