Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவை வெளியேற்றுவோம்..!? சொன்னபடி Get Out Stalin ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யத் தொடங்கிய அண்ணாமலை!

Advertiesment
Udhayanithi Annamalai

Prasanth Karthick

, வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (09:07 IST)

திமுகவிற்கு எதிராக Get Out Stalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப் போவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அதை பதிவிட்டு தொடங்கி வைத்துள்ளார்.

 

திமுக - தமிழக பாஜக இடையே ஏற்பட்டுள்ள உரசல், வாக்குவாதங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் Get Out Modi என அவர் வாயால் சொல்ல தைரியம் இருக்கிறதா?” என சவால் விடுத்தார். நேற்று திமுக இளைஞரணி கூட்டத்திற்கு பிறகு உதயநிதியுடன் திமுகவினர் பலரும் சேர்ந்து Get Out Modi என கோஷமிட்டு வீடியோ வெளியிட்டனர்.

 

இந்நிலையில் முன்னதாக சொன்னபடி இன்று காலை 6 மணிக்கு திமுகவிற்கு எதிராக Get Out Stalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவில் “ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுபடுத்தும் அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

நேற்று முதலாக திமுகவினர் Get Out Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் அது 400K ட்ரெண்டிங்கை தொட்டிருக்கும் நிலையில், இன்று காலை தொடங்கிய Get Out Stalin ஹேஷ்டேக் அதற்குள் 300K ட்ரெண்டிங்கை தொட்டுள்ளது. இன்றைய நாள் முடிவதற்கு எந்த ஹேஷ்டேக் அதிகம் ட்ரெண்டாகிறது என்ற போட்டி இருப்பதால் இரு கட்சியினரும் ஹேஷ்டேகுகளை வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி குறைப்பு.. எஸ்பிஐ கூறிய மகிழ்ச்சியான தகவல்..!