வீடு கட்டியதற்காக கடன் வாங்கியவர்களுக்கு, பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன்களின் வட்டிகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, 9.15% ஆக இருந்த இபிஎல்.ஆர் (EBLR) கடன் வட்டி, இனி 8.90% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 8.40% ஆக இருந்த ஆர்எல்எல்ஆர் (RLLR) வகை கடன்களுக்கு, இனி 8.15% மட்டுமே வட்டி விதிக்கப்படும். பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இந்த புதிய வட்டி விகிதம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதன் தொடர்ச்சியாக, இப்போது வீட்டுக்கடன் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், விரைவில் வாகனக் கடன்கள் வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.