2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்றும், ஆனால் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பிரேமலதாவிற்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக துணை பொதுச்செயலாளர் பாலமுருகன், கட்சி கூட்டத்தில் பேசியபோது, "பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவித்தார். ஆனால், இதற்கு முன்பு, "தேமுதிகவிற்கு மாநிலங்களவை தொகுதியே தர முடியாது" என்று பழனிச்சாமி கூறியதாக பிரேமலதா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது தேமுதிக நிர்வாகி ஒருவர், "துணை முதல்வர் பதவி வழங்கப்படும்" என்று ஈபிஎஸ் கூறியிருப்பது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் அக்கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.