Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

ரிஷபம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
ரிஷபம்
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:34 IST)
கிரகநிலை: ராசியில்  ராஹூ - சுகஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.
 

பலன்:
 
எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பும்  ரிஷப ராசி அன்பர்களே,  இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன்  ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். 
 
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணிகள் நடப்பதற்கு சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். தந்தை வழி அரசியல் செய்பவர்கள் எதிலும் கவனமாக  பேசுவது நல்லது.
 
பெண்களுக்கு  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு  உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. 
 
ரோகிணி:
 
இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில்  எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். 
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம்  கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.
 
பரிகாரம்: சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 11, 12, 13.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேஷம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்