Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளில் தெறிக்கவிடும் திரிஷா "பரமபதம்" ட்ரைலர்!

Webdunia
சனி, 4 மே 2019 (14:22 IST)
திரிஷாவின்  "பரமபதம் விளையாட்டு" பட ட்ரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 


 
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 20 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். இன்று தனது  36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷாவிற்கு ட்ரீட்டாக அவரது நடிப்பில் உருவாகி வரும் "பரமபதம் விளையாட்டு" படத்தின் ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 
 
இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், மற்றும் பேபி மானஸ்வி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 
 
 த்ரிஷாவின் 60-வது படமான பரமபதம் விளையாட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  அண்மையில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
இதை பற்றி திரிஷா கூறுகையில்,  “மே 4-ம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷலான நாள்.  இருந்தாலும் இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல். ‘பரமபதம் விளையாட்டு’ இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம். இந்த ஜானரில் இதுதான் என்னோட முதல் படம். ஒரு இரவில், காட்டுக்குள் நடப்பதுதான் இப்படத்தின் முழுக்கத்தை  . கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பு  ரசிகர்களுக்கும் பிடிக்கும். ‘பரமபதம் விடையாட்டு’ அனைத்தும் கலந்த த்ரில்லர், ஆக்‌ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் இருக்கு. படத்தின் ட்ரெய்லர் குறித்த உங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
 
திரிஷாவின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும்  திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments