Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகனின் திருமணத்தையொட்டி ரஜினிக்கு அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்!

மகனின் திருமணத்தையொட்டி ரஜினிக்கு அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்!
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (11:04 IST)
நடிகர் ரஜினிகாந்தை நேரில்  சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில்  சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் திருமணம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. 
 
அண்மையில் முஸ்லீம் மதத்திற்கு மாறிதையடுத்து தற்போது குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் வரும் 26ஆம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. 
 
இதற்காக பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து தற்போது  சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து மகனின் திருமண விழாவில் கலந்துகொள்ளருமாறு கூறி அழைப்பு விடுத்துள்ளார். 
 
குறளரசனுக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்த ரஜினி திருமணத்திற்கு வருவதாக வாக்குக்கொடுத்துள்ளதாக  கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சிம்புவின் தம்பி என்பதாலும், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் மகன் என்பதாலும் இந்த திருமணத்தில் கோலிவுட்டின் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி எம் மோடி திரைப்படம் தணிக்கை விதிகளை மீறியதா ? – மீண்டும் எழுந்த சிக்கல் !