Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''உங்க வயசுக்கு இதை பண்ணியிருக்க வேண்டாம்''- புளூ சட்டை மாறனுக்கு ''மாவீரன்'' புரடியூசர் அட்வைஸ்

Advertiesment
''உங்க வயசுக்கு இதை பண்ணியிருக்க வேண்டாம்''- புளூ சட்டை மாறனுக்கு ''மாவீரன்'' புரடியூசர் அட்வைஸ்
, செவ்வாய், 4 ஜூலை 2023 (14:46 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி  வரும் திரைப்படம் மாவீரன்.

இப்படத்தில்  அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின, மூத்த நடிகை சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷ்வா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்தப்  படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த  விழாவில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த  நிலையில்,  மாவீரன் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில்,  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸன் இம்பாசிபில் என்ற படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்து, பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில், மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்... 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது.

முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.

'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' மொமன்ட். என்று பதிவிட்டு, ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா தன் டுவிட்டர் பக்கத்தில் ரீவிடூட் பதிவிட்டுள்ளார். அதில், ‘’ வணக்கம் சார். நான் அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர்! எனக்கு என் படம்தான் சார் மிஸன் இம்பாசிபிள், அவதார், ஆர.ஆர்.ஆர். எல்லாமே! உங்க வயசுக்கு இப்படி ஒரு படத்தை ஷேர் பண்ணி இத பண்ணியிருக்க வேண்டாம் சார்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு மூக்கில் காயம்… அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சை!