Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளம்பரம் தேடிக்கொள்வது சரியா?அஜித்திடம் கேள்வி எழுப்பிய ப்ளூசட்டை மாறன்

Advertiesment
ajithkumar
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (20:16 IST)
பட புரமோஷனில் கலந்துகொண்டால் வெற்றி அதிகரிக்குமே என அஜித்திற்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார், அசல் திரைப்படத்திற்குப் பின்  பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பேட்டியளிப்பது,ஊடகவியலாளர்களைச் சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

அதனால், தான்  நடிக்கும் படங்களில் புரமோஷனிலும் அவர் கலந்துகொள்வதில்லை, ஆனால், துணிவு  படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொள்வார் என்றும் இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு நல்ல திரைப்படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்றும் அந்த படம் தானாகவே புரமோஷன் செய்து கொள்ளும் என்று அஜித்தின் குரலாக அதைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில், துணிவு படத்தில் அஜித்தின் டப்பிங் பணிகள் முடிந்தது என படக்குழு ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தது, இது வைரலாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் அஜித்திற்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:  ‘’ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா?
 

webdunia

இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், ் மகிழ்வார்களே’’ என்று தெரிவித்துள்ளார்.

 
Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியில் கதை நாயகியான நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !