பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் பட்டியல் பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வீட்டிற்குள் நுழைந்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதை தொடர்ந்து அரோரா சின்க்ளேர், பிரவீன் காந்தி என ஒவ்வொரு போட்டியாளராக வரவர சமூக வலைதளங்களில் அவர்கள் பற்றிய பதிவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளே சென்றதுமே முதல் வேலையாக திவாகர் தனது நடிப்பு திறமையை கேமரா முன்னால் காட்டத் தொடங்கியது பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
பின்னர் பிரவீன் காந்தியிடம், தனது நடிப்பு திறமையை திவாகர் அளக்கத் தொடங்க.. சூப்பர் சூப்பர் என்று சொன்னபடியே அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார் பிரவீன் காந்தி. அதுபோல அரோரா சிங்க்ளேரிடம் சென்று நீங்க அழகா இருக்கீங்க.. உங்க லிப்ஸ் அழகா இருக்கு என அவர் வழிந்த வீடியோவும் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K