Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு கோரிக்கை வைத்த மகன்....!

Advertiesment
காதலியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு கோரிக்கை வைத்த மகன்....!
, புதன், 29 ஜனவரி 2020 (11:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
 
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துகொண்டனர்.
 
பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வருவதுடன் அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு கிசு கிசுக்கப்படுவார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் வந்தந்திகள் கோலிவுட்டில் பரவி வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR டீசர் யூடியூபில் வெளியாகியது. அந்த வீடியோ விரைவில் 2 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க உள்ளது. இதனை தெரிவுப்படுத்தும் வகையில் தனது தோழியான  ஜுவாலா கட்டாவுடன் டீசருக்கு கொடுத்த மாபெரும்வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகன் ஆரியனின் புகைப்படமொன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு "தனது தந்தையின் புதிய திரைப்படமான எஃப்.ஐ.ஆர் டீஸரைப் பார்க்க ரசிகர்களை கோரிக்கை விடுக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார். காதலியுடன் இருக்கும்போது மகனின் இந்த புகைப்படம் கொஞ்சம் மன வருத்தத்தை கொடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி பிட்டு படத்துக்குதான் உதவினார் ! சமூக வலைதளத்தில் வெளியான பதிவு !