தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து கடந்த சில நாட்களாகவே பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி கிசு கிசுக்கப்பட்டார். மேலும் தனது உடலை முன்பை விட தற்போது மிகவும் கட்டான தோற்றத்தில் இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பல கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்ததாக பேட்டி கொடுத்திருந்தார். தற்போது அதனை குறித்து ரசிகர் ஒருவர் ஜுவாலா கட்டாவிற்காக தானே உடல் எடையை குறைத்தீர்கள் என்று கேட்க, உடனே அதற்கு ரிப்ளை செய்த ஜுவாலா கட்டா எனக்காக இல்லை அவராகவே இதை செய்தார் என கூறியுள்ளார்.